குறிஞ்சிப்பாடி, பண்ருட்டியில்,வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்து, மாவட்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
“செய்தி ஜீவா செந்தில் “
கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகங்கள், நடுவீரப்பட்டு கிராம நிருவாக அலுவலர் அலுவலகம், நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி நகராட்சி அலுவலகங்கள், ஆலப்பாக்கம் கிராம செயலகம், குடிகாடு சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்
இன்று (20.11.2025) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர், சிபி. ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில்,
இந்தியதேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு இல்லங்களுக்கு சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது வழங்கப்பட்ட படிவங்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் மீளப்பெறும் பணிகளும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அரசு அலுவலர்கள் மூலம் பதிவேற்றம் செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் 2002 வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் இடம்பெற்றால் அதற்கான அட்டவணையில் பாகம் மற்றும் வரிசை எண் பூர்த்தி செய்யப்பட்ட விவரம் மற்றும் இடம் பெறாமல் இருந்தால் அதற்கான அட்டவணையில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பது குறித்தும், வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்ப படிவங்கள் வாக்காளர்கள் விடுபடாமல் முறையாக பதிவேற்றம் செய்யப்படுகிறதா என்பது குறித்து இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட தேர்தல் அலுவலர், மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்.சிபி ஆதித்யா செந்தில்குமார் , தெரிவித்துள்ளார்.
ஆய்வின் போது தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கமலம், நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணராஜன், பண்ருட்டி நகராட்சி ஆணையாளர் காஞ்சனா, வருவாய் வட்டாட்சியர்கள்,குறிஞ்சிப்பாடி விஜய்ஆனந்த், பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.