தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் அருகே மாணவி தற்கொலை: இன்ஸ்டாகிராம் மூலம் தொந்தரவு செய்ததாகக் குற்றச்சாட்டு –கல்லூரி மாணவர் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்.
திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் நான்கு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வுக்கு காரணமாக, அலங்கியம் பகுதியில் வசித்து வரும் துர்க்கையப்பன். இவரது மனைவி மாசாணம் இவர்களது மகன் மாதவன் இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஒரு கல்லூரி மாணவர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார் என மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர். அவர்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் காரணமாக அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவலறிந்து வந்த போலீசார் மக்களை சமாதானப்படுத்தி மறியலை அகற்றினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
அதே நேரத்தில் அலங்கியம் காவல்துறையினரிடம் மாணவி இறந்தபோது இறப்பிற்கு காரணமாக இருந்த மாணவன் மீது வழக்கு பதிய வேண்டும் என ஏற்கனவே போலீசாரிடம் இறந்த மாணவியின் பெற்றோர் தெரிவித்திருந்த நிலையில் போலீசார் மாணவி செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என தவறாக வழக்கு பதிவு செய்ததாகவும் உடனடியாக வழக்கை மாற்றி பதிவு செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.