தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் உள்ள Knitcity Sports Academy சார்பில் Knitcity Autocross 2026 மோட்டார் விளையாட்டுப் போட்டி நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. Federation of Motor Sports Clubs of India (FMSCI) அங்கீகாரத்துடன் நடைபெற்ற இப்போட்டியில், இருசக்கர வாகனங்களுக்கான Dirt Race பிரிவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வீரர்கள் உற்சாகத்துடனும், கடுமையான போட்டியுடனும் பங்கேற்றனர். இருசக்கர வாகனப் போட்டிகளுக்கான மொத்தப் பரிசுத்தொகை சுமார் ரூ.1.20 லட்சம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் Overall Dirt Race Winner பட்டத்தை Karan வென்றார்.

போட்டி முழுவதும் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டன. போட்டி அதிகாரிகள், நடுவர்கள் (Marshals), காவல்துறையினர் மற்றும் உள்ளூர் பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் போட்டி வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

தொடர்ந்து Knitcity Autocross 2026 கார் பந்தயம் நடைபெற உள்ளது. இதில் 80-க்கும் மேற்பட்ட கார் பந்தய வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற உள்ள கார் Autocross போட்டி, பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பான மோட்டார் விளையாட்டு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த FMSCI அதிகாரிகள், போட்டி அதிகாரிகள், Marshals, காவல்துறையினர், உள்ளூர் நிர்வாகத்தினர், ஸ்பான்சர்கள், பார்வையாளர்கள் மற்றும் அனைத்து போட்டியாளர்களுக்கும் Knitcity Sports Academy சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மோட்டார் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், வரும் ஆண்டுகளிலும் இதுபோன்ற Autocross மற்றும் Dirt Race போட்டிகளை மேலும் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என Knitcity Sports Academy சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *