காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

.காங்கயத்தில் ஒப்பந்ததாரர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

காங்கயம் நகரம், கரூர் சாலையில் ஒப்பந்ததாரர் தனசேகர் என்பவரது வீடு உள்ளது. இவர் பல ஆண்டுகளாக அரசின் ஒப்பந்தங்களை எடுத்து நடத்தி வருகின்றார். தமிழக முழுவதிலும் பல்வேறு வகையான பல கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் எடுத்து பணி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் உள்ள தனசேகர் வீடு மற்றும் அலுவலகங்களில் கரூர் மற்றும் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், வங்கி கணக்குகள், ரொக்கம், பணம், பரிவர்த்தனை என அனைத்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவரது மகன் மருத்துவர் ராஜசேகர் என்பவர், தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *