எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
பூம்புகார் கடற்பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் புதைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பொக்கிஷங்களைக் கண்டறியும் புதிய கடலடி அகழ்வாராய்ச்சிப் பணிகள் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
பூம்புகாரில் தொல்லியல் துறையுடன் ஆழ் கடலில் சென்று ஆய்வு செய்தபின்னர் தகவல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள “பூம்புகாரில்” பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராய, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், மூன்றாம் கட்ட ஆராய்ச்சி பணி இன்று தொடங்கியது
தொல்லியல் கடல் ஆய்வு குழுவினருடன் அமைச்சர் ராஜ்மோகன் ஆழ்கடல் நீச்சல் வீரர்களுடன் ஆழ்கடலுக்கு சென்று தொல்லியல் ஆய்வு பணியில் ஈடுப்பட்டார்.கடலடி ஆய்வுக்கு பின்னர் கரை திரும்பிய அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,
கடலுக்கு அடியில் ஆய்வு மேற்கொண்டபோது பல்வேறு வகையான பானை ஓடுகள் (Earthwares) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை கார்பன் டேட்டிங் (Carbon Dating) ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளன. இவற்றின் வடிவம் மற்றும் நிறத்தை வைத்துப் பார்க்கும்போது இவை சங்க காலத்தைச் சார்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கட்டிட அமைப்புகள் & உறை கிணறுகள்: பானை ஓடுகள் மட்டுமின்றி, கல் அமைப்புகள் மற்றும் உறை கிணறுகளுக்கான சான்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்குத் தமிழர்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பானை ஓடுகள் கிடைத்துள்ளதன் மூலம், பூம்புகார் பண்டைய காலத்தில் மிகச்சிறந்த வணிகம், கலை மற்றும் பண்பாட்டு நகரமாக விளங்கியுள்ளது என்பது உறுதியாகிறது.
பூம்புகார் பகுதியில் கடலடி அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், சிந்துவெளி நாகரிகத்திற்கும் சங்க காலத்திற்கும் உள்ள தொடர்பை நிரூபிக்கும் சான்றுகள் விரைவில் வெளிவரும் என்றார்.
மழையால் நெல் மூட்டைகள் நனைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், பிரச்சனைக்கு உரிய தீர்வுகளைக் காணவும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்
தற்காலிக ஆசிரியர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டு வருகிறது. அவர்களுக்கான சட்டப் போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், அவர்களின் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
தனியார் பள்ளிக் கட்டணங்களை முறைப்படுத்த, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் புதிய கமிட்டி (Fee Committee) சீரமைக்கப்பட உள்ளது. கட்டண அமைப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது,RTE ல் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணத்தில் முரண்பாடு காட்ட கூடாது சிறப்பு சலுகை வழங்க வேண்டும் இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்றார்.