கண்டமங்கலம் ,செப்- 23
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் கொடுக்கூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை சமூக நீதிநலத்துறை அமைச்சர் வன்னியரசு கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
அப்பொழுது பள்ளி மாணவ மாணவிகளிடம் கல்வி மற்றும் பள்ளி குறித்து நிறை குறைகளை கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அமைச்சரிடம் அளித்தனர்.
அதில் பள்ளிக்கு சுற்று சுவர் கூடுதல் கழிப்பறை பத்தாம் வகுப்பு வரை உயர்நிலைப் பள்ளியாக மாற்றி தர வேண்டும் என்று பல்வேறு கோரிக்கை மனு கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில்மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் குமார் வட்டாட்சியர் மகாதேவன் கூடுதல் வட்டாசியார் பிரசாந்த் வருவாய் ஆய்வாளர் கவிதா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திரா காந்தி, சிவகுமார் கிராம நிர்வாக அலுவலர் நபிஷா பானு ஊராட்சி மன்ற தலைவர் ஆதிநாராயணன் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.