தென்காசி மாவட்டம் ஆய்குடி அருகே
அகரக்கட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில்தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்நிறுவனத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில்Bடைப்பெற்றது

பொதுச் செயலாளர் ஆனந்த் காசிராஜன் பொருளாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் காசிராஜன் பேசும்போது ஜூலை மாதம் 15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை தென்காசி மாவட்டம் முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பேசினார்.

பொருளாளர் சுப்பிரமணியன் பேசும்போது ஜூலை மாதம் 23 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா ஏழைகளுக்கு உதவி செய்கின்ற விழாவும் ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாட வேண்டும் என்று பேசினார்கள் இதனை தொடர்ந்து அகரக்கட்டு லூர்து நாடார் பேசும் போது பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் தென்காசி மாவட்டத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவ சிலைகளுக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்வோம் அதனை தொடர்ந்து ஜூலை 23ஆம் தேதி தென்காசியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முப்பெரும் விழாவாக கொண்டாடுவோம் நாம் கொண்டாடுகின்ற விழா பெருந்தலைவர் காமராஜருக்கு பெருமை சேர்க்கின்ற விழாவாக அமைய வேண்டும் அனைத்து ஊர்களிலும் இருந்து இந்த விழாவை கொண்டாடுவதற்கு நம் சமுதாய மக்களை வருகைதர சொல்லி அழைப்பு விடுப்போம் என்று பேசினார்கள் இந்த நிகழ்ச்சியில் மாநில துணை செயலார் ஜான் டேவிட் தென்காசி ஒன்றிய தலைவர் ராஜ் நயினார் மாவட்ட துணை செயலாளர் மோகன் வைகுண்ட ராஜன் முத்துராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *