செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் இ.பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு கேட்டு, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் வசந்தவேல் தலைமையில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை தலைவர் கி.நடேசன், தொமுச பேரவை பொருளாளர் கோ.சி.வள்ளுவன், அமைப்புசாரா தொமுச பொதுச் செயலாளர் இரா.பொன்ராம், தமிழ்நாடு அனைத்து அமைப்புசாரா தொமுச மாநில பிரச்சார செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம், தொமுச இணைப் பொதுச் செயலாளர் விஜயகுமார், மின்வாரிய தொமுச பொதுச் செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தனர்.
அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கடமலைபுத்தூர் பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.