திருப்பூர் மாவட்டம். கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சதீஷ்குமார் தலைமையில் வழக்கு பதிவு செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதம் போராட்டம்

பொருள்.எழில் புளு மெட்டல் ராமகிருஷ்ணன் கல்குவாரி அனுமதி பெற்ற அளவை விட சட்டவிரோத 20 லட்சம் கசமீக்கு மேல் வெட்டி எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது

உறுதிபடுத்தி அபராதம் விதித்தல் உறுதிப்படுத்தப்பட்ட கனிம வள கொள்ளை தொடர்பாக ஆண்டுகளாக வழக்கு பதிவு செய்யாமல் இருக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து உடனடியாக வழக்கு பதிவு செய்யக் கோரி தொடர் உண்ணாவிரத போராட்டம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடங்கிபாளையம் புல எண் 55,56,57 எழில் புளு மெட்டல் ராமகிருஷ்ணன் கல்குவாரி தொடர்பாக பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் அவர்கள் பார்வை 1- இல் கண்டுள்ள உத்தரவு திருப்பூர் மாவட்ட துணை இயக்குனர் அவர்களுக்கு மேற்கண்ட கல்குவாரி மீது கலாய்வு செய்து சட்டவிரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தால் அதன் மீது உரிய வருவாய்த்துறை கோட்டாட்சியர் மூலம் வழக்கு பதிவு செய்து, சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கனிமத்தை அளவு செய்து அபராதம் விதித்து, தனி வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டு வரை அதன் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மாவட்ட ஆட்சியர் 07.09 2022 அன்று மேற்கண்ட கல்குவாரியில் விதி மீரல் உள்ளது எனக் கூறி தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டார். இதனை புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரிடம் மேல் முறையீட்டிற்கு எடுத்துச் சென்ற கல்குவாரி உரிமையாளர் ஏற்கனவே மண்டல இணை இயக்குனர் தலைமையிலான குழு இந்த கல்குவாரியை நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்து சுமார் 20 லட்சம் க.ச.மீ அளவிற்கும் மேல் அனுமதி பெற்றதை விட அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மேல்முறையீட்டு விசாரணையில் சுமார் 10.40 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

ஆகவே மேற்கண்ட கல்குவாரி உரிமையாளர் சட்டவிரோதமாக அனுமதிக்கப்பட்டதை விடபல மடங்கு அதிகமாக இயற்கை வளங்களை வெட்டி மேற்கண்ட எடுத்த்தர விற்பனை செய்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அதன் மீது மேற்கண்ட உத்தரவுகளின் அடிப்படையில் உடனடியாக குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் உரிய வழக்கு பதிவு செய்யும் வரையிலும் இன்று முதல் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *