முதுகுளத்தூர் செய்தியாளர்
ஆர்.செந்தில்குமார்
பசும்பொன்னில் தேவர் குல கூட்டமைப்பு தலைவர் டேவிட் பாண்டியன் தரிசனம்
கமுதி அருகே பசுபொன்னியில் தேவர் குல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் மாவீரன் சண்முகையாபாண்டியன் அவர்களின் மறைவுக்கு பின் அதனை வழிநடத்த அவருடைய சகோதரி மகனும் தற்போதைய தேவர் குல கூட்டமைப்பு தலைவர் திரு எம்.டேவிட் பாண்டியன்தேவர் அவர்கள் தலைமையில் புதிய நிர்வாகிகளுடன் தேவர் திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தார்,
தேவர் வீட்டில் உள்ள பூஜை அறை, புகைப்படங்கள், ஆகியவற்றை பார்வையிட்டார், பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் விரைவாக மறைந்த தலைவர் சண்முகையா பாண்டியன் அவருடைய தொண்டர்கள் , அனுதாபிகள், தமிழக முழுவதும் இருக்கிறார்கள் விரைவாக அவர்களை சந்தித்து தேவர் குல கூட்டமைப்பு மாபெரும் இயக்கமாக மீண்டும் மறு கட்டமைக்கபடும் எனவும் தமிழகத்தில் தொடர்ந்து வரும் அரசியல் மாற்றங்கள் அனைத்து சமுதாய மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும், தேவர் சமுதாய மக்களுக்கான பல்வேறு போராட்டங்கள் மக்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்னெடுக்கும் எனவும் கூறினார்
அதுபோல நீண்டகால தேவர் சமுதாயத்தின் கோரிக்கையான டிஎன்டி ஒற்றைச் சாதி சான்றிதழ், பி சி ஆர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் திருப்பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தார் உடன் மாநில நிர்வாகிகள் எம். வேலுச்சாமி பாண்டியன், பசும்பொன் அய்யனார், கருப்பசாமித்தேவர், காசிராஜன், கே.எஸ். ஐயப்பன், இராமசந்திரன், மீனாட்சி சுந்தரம்பிள்ளை, மணிகண்டன், நெப்போலியன், ஜெகதீஸ்,யமஹா பாஸ்கர், நாகராஜ்,ஆகிய மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் முழுவதும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் கூறினார்கள்.