முதுகுளத்தூர் செய்தியாளர்
ஆர்.செந்தில்குமார்
ராமநாதபுரம், அக்.8-
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி தந்தை என்று அனைவராலும் அழைக்கப்படும் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களை சேவை மனப்பான்மைக்காகவே உருவாக்கிய மாமனிதர் கல்வி தந்தை டாக்டர் இ.எம். அப்துல்லா நூற்றாண்டு விழா அக்டோபர் 9ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் கல்வித்தந்தை டாக்டர் இ எம் அப்துல்லா நூற்றாண்டு விழா நாளை காலை 9 மணிக்கு துவங்குகிறது. நூற்றாண்டு விழாவில் செயயது அம்மாள் அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டிங் டாக்டர் பாபு அப்துல்லா தலைமை ஏற்று துவக்கி வைக்கிறார். இவ்விழாவில் மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சாலிகு திரைப்பட நடிகர் செந்தில் மற்றும் சொல்வேந்தர் கலைமாமணி சுகி சிவம் உள்ளிட்ட பட்டிமன்ற பிரபல பேச்சாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர். விழா மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. விழாவில் கல்வி மற்றும் முக்கிய துறைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு டாக்டர் அப்துல்லா நினைவு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர் செய்யதா அப்துல்லா, கலைக் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, இன்ஜினியரிங் கல்லூரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் பப்ளிக் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா, அபிதா தஸ்னிம், டாக்டர் ஷிபா பாபு, பாரூக் அப்துல்லா, டாக்டர் பாத்திமா ஷானாஸ், டாக்டர் ராஷிகா, டாக்டர் அகிலா, டாக்டர் ஹாரிஸ் அப்துல்லா, டாக்டர் எஜஷ் அப்துல்லா, டாக்டர் அத்தீப் அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற உள்ளது.