தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் கூட்டம் மாவட்ட தலைவர் பீர் முஹம்மது தலைமையில் கூத்தாநல்லூர் அருகில் உள்ள சபிக் மஹாலில் 13/5/23 நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைப் பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மாநிலச் செயலாளர் நெல்லை பைசல் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

மாநில துணைப் பொதுச் செயலாளர் தஞ்சை முஜிபுர் ரஹ்மான் கூறியதாவது,
சமீபத்தில் திரையரங்குகளில் மற்றும் ஓடிடியில் வெளியான கேரளா ஸ்டோரி, பர்கானா ,மற்றும் புர்கா போன்ற திரைப்படங்கள், இஸ்லாமியர்களின் நம்பிக்கையையும் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக தவறான கருத்துகளையும் திரைப்படத்தில் கூறப்பட்டிருக்கின்றது மத நல்லிணக்கத்தை கெடுக்கும் இத்தகைய திரைப்படங்களை தடை செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெண்ணுரிமை போற்றும் இஸ்லாம் என்ற தலைப்பில் ஒரு மாத காலம் தொடர் பிரச்சாரம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டு சாமானியர்கள் மத்தியில் இத்தகைய பிரச்சாரங்கள் மூலம் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் சலுகைகள் குறித்து எடுத்துரைக்கப்படுகின்றது என்றும், துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும் தெருமுனைப் பிரச்சாரங்கள் புத்தகங்கள் வாயிலாகவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது என்றும், மேலும்,

தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு நடைமுறையில் இருக்கும் கல்வி வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன மூன்றரை சதவீத இடஒதுக்கீடு முறையாக பல துறைகளில் வழங்கப்படுவதில்லை மதம் மாறி இஸ்லாத்தை தழுவியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை ரூஸ்டர் முறையில் சரியான வரிசை முறையில் இஸ்லாமியர்கள் பயன்பெற முடிவதில்லை இஸ்லாமியர்களின் சதவீதத்தோடு ஒப்பிடுகையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு குறைவு. இப்படி பல குளறுபடிகள் இட ஒதுக்கீட்டு நடைமுறையில் இருப்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அனைவரும் தெளிவாக அறியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் , தமிழகத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் விகிதாச்சார பிரிநிதித்துவ முறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும்,

விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை பெறும் வகையில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இஸ்மத் பாஷா மாவட்ட பொருளாளர் முகமது சலீம் மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது பாசித் மாவட்ட துணை செயலாளர் தாரிக் சக்கரைக்கனி மாலிக் யாசர் மற்றும் மாணவர் அணி தொண்டர் அணி மருத்துவ சேவை அணி அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் ஆண்கள் பெண்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *