தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை பள்ளியின் துணை முதல்வர் அரங்கநாயகி கொடியசைத்து துவக்கி வைத்து, பேரணியில் பங்கு பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.
இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் இந்திரா, ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோலர் பால் சங்க செயலாளர் கோவிந்தராஜ், மாநில துணை செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலவஸ்தாச்சாவடில் இருந்து புறப்பட்டு மன்னர் சரபோஜி கல்லூரியில் நிறைவடைந்த பேரணிக்கு தஞ்சாவூர் போக்குவரத்து காவல் துறையினர் சிறப்பான பாதுகாப்பு வழங்கினார்கள்.