தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் முரசொலி மாறன் 23ஆம் ஆண்டு நினைவு நாள்; திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் தலைமையில் மரியாதை.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் திமுக கட்சி அலுவலகத்தில், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இல். பத்மநாபன், நகரச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நகர வார்டு, கிளைக் கழக, மாவட்ட, மாநில நிர்வாகத்தினர் பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
முரசொலி மாறன் நாடாளுமன்ற உறுப்பினராகவும், முன்னாள் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தவர். வர்த்தக மற்றும் வணிகத் துறையை மேம்படுத்துவதற்கும், இந்திய தொழில்களை உலகளவில் உயர்த்துவதற்கும் அவர் செய்த பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவராக விளங்கிய அவரை நினைவுகூர்ந்து நிகழ்வு நடைபெற்றது.