நீடாமங்கலம்,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மேலாளவந்தசேரி கிராமத்தில சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளார்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 20 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.
இந்த தொகுப்பு வீடுகளில் 10க்கும் மேற்பட்ட வீட்டின் கான்கீரட் காரைகள் மற்றும் கூரைகள் முழுவதும் பெயர்ந்து விழுவதால் இருவர் படுகாயம் அடைந்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் தற்போது மழை பெய்து வருவதால் மேற்கூறைகள் பெயர்ந்து விழுகிறது.
இதனால் தங்கள் குழந்தைகள் மீது இடிந்து விழும் என்ற அச்சத்தால் இரவு நேரங்களில் பழுதடைந்த வீட்டில் தூங்க முடியாமல் அருகில் உள்ள உறவினர்களின் வீட்டில் தூங்கி வருவதாக வருத்தத்துடன் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது குறித்து நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்து இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவே மாவட்ட ஆட்சியர் சேதம் அடைந்த தொகுப்பு வீடுகளை பார்வையிட்டு பயனாளிகளுக்கு புதிய கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .