தமிழகத்தில் முதல்முறையாக 40 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு விழா: மலைவாழ் மாணவ, மாணவிகளின் நலன் கருதி பழங்குடியினர் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தமிழக அரசு கருணை உள்ளத்தோடு நிரப்ப வேண்டும் என கோரிக்கை.

அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பு விழாவானது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சி பகுதியில் உள்ள பழங்குடியினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

1975-ம் ஆண்டு முள்ளுகுறிச்சி கிராமத்தில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட ஆண்கள் மேல்நிலைப் பள்ளி துவங்கப்பட நிலையில் தமிழ்நாட்டில் மலைவாழ் மக்கள் கல்வி நலனுக்காக துவங்கப்பட்ட மிகவும் பழமையான பள்ளிகளில் இதுவும் ஒன்று…
இந்தப் பள்ளி வரலாற்றில் மலைவாழ் மக்களுக்கு கல்வி கண் கொடுத்த மூன்றாவது தெய்வமான குருவை சந்தித்து அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 1975 முதல் 1995 வரை கல்வி பயின்ற மலைவாழ் மாணவர்கள் ஒன்று கூடி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கேடயங்கள் சான்றிதழ்களை வழங்கி மகிழ்ந்தனர்.

இந்தப் பள்ளி துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை இங்கு முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பு விழா என்பது நடைபெறவில்லை

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள், ஊர்வலம் என மகிழ்ச்சி பொங்க தங்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தினர்…
மேலும் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் குடும்பத்தோடு உணவு அருந்தி மகிழ்ந்ததோடு முள்ளுகுறிச்சி கிராமம் வழியாக ஆசிரியர்களை கௌரவித்து ஊர்வலமாக அழைத்து வந்து மகிழ்ந்தனர்..

இந்த ஏற்பாட்டினை முன்னாள் மாணவர்கள் கடந்த ஐந்து மாதங்களாக செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *