வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வத்தலகுண்டு பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள காந்திநகர் பிரதான சாலையில் 2 டாஸ்மார்க் கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் 5 மருத்துவமனைகளும், எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளும் செயல்படுகிறது. இந்த சாலையில் பொதுமக்கள் பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் செல்ல முடியாத அளவிற்கு மதுவை அருந்திவிட்டு சாலையில் நடுவிலும், சாலை ஓரங்களிலும் படுத்து கிடக்கின்றனர்.

பொதுமக்கள் பலமுறை மதுபான கடைகளை மாற்றக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனே டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி திண்டுக்கல் தேமுதிக கிழக்கு மாவட்டம் சார்பில் அப்பகுதி பொதுமக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜவகர் தலைமையில், வத்தலகுண்டு ஒன்றிய செயலாளர் கருத்த பாண்டி உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

மேலும் இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகம் 15 நாட்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது. நடவடிக்கை எடுக்காவிட்டால் தேமுதிக தலைமைக் கழகத்தின் அனுமதி பெற்று மக்களுடன் சேர்ந்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இதில்கிழக்கு ஒன்றிய செயலாளர் மணி முருகன், மாவட்ட நிர்வாகிகள் முத்துகாளை, ஜெர்மன் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *