நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியம் 87 கவுண்டம்பாளையம் ஊராட்சி குமரமங்கலம் இந்திரா நகரில் அரசு புறம்போக்கு நிலத்தில் தனியார் ஒரு நபர் ரியல் எஸ்டேட் அமைப்பதற்கு அரசு நிலத்தில் உள்ள தேசியமரமான பனைமரம் மற்றும் வேப்பமரம் புங்கமரம் என 100க்கும் மேற்பட்ட மரங்களை வேரோடு வேராக இரவு நேரத்தில் ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரிகள் மூலம் வெட்டி கடத்தி எடுத்துச் சென்று பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவாக அழிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து நடத்தி சமரசம் ஏற்பாடு செய்து மரம் விற்பனை செய்த பணத்தினை பங்கு போட்டு கொண்டதாக தெரியவருகிறது

மேலும் ஒரு பனை மரம் 30 அடி உயரம் வளர 40 வருடங்கள் ஆகும் இப்படி பல வருடங்கள் வளர்ந்து வந்த மரத்தை இந்த சமூக விரோதிகள் இரவோடு இரவாக வெட்டி திருடி சென்றுள்ளனர்.

தமிழக அரசே மாவட்ட நிர்வாகமே உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை முழக்கம் எழுப்பினர்

சி.சுந்தரம் தலைமை வகித்தார்.நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் ஆர். ஈஸ்வரன்,
மாவட்ட செயற்குழு உறுப்பினர்.சு.சுரேஷ்.,
எலச்சிபாளையம் மேற்கு கே.எஸ். வெங்கடாசலம்., மாவட்ட குழு உறுப்பினர் ஜி.பழனியம்மாள்., ஒன்றிய குழு உறுப்பினர்கள்.சத்திவேல். கிட்டுசாமி.ரமேஷ். வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சத்திவேல். உட்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *