விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் எட்டாம் ஆண்டு நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாள் கொலு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் பெரியவர்கள், சிறியவர்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, ஆலயத்தில் கொலு வைத்து வழிபாடு செய்யப்பட்டுள்ள சுவாமிகளுக்கு தினமும் பக்திப் பாடல்கள் பாடி வழிபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

மேலும், நவராத்திரி விழாவிற்கு வருகை தரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள் தூள், குங்குமம் மற்றும் வாழைப்பழம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தினமும் பக்தர்களுக்குப் பிரசாதமும் வழங்கப்படுகிறது.

இந்த நவராத்திரி கொலு பூஜையில் உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டு அருள் பெற்றுச் சென்றனர். தொடர்ந்து நடைபெற்று வரும் நவராத்திரி விழாவால் பெரம்பை கிராமம் பக்தி மயமாகக் காட்சியளிக்கிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *