விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருக்கனூர் அருகே உள்ள எறையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாள் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில், ஸ்ரீ முத்தாலம்மன் மகாலட்சுமி அவதாரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் எறையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனைப் பயபக்தியுடன் வழிபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பங்கேற்று, ஸ்ரீ முத்தாலம்மனின் அருளைப் பெற்றுச் சென்றனர். 🙏