தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம், பல்லடம் உட்கோட்டம், பொங்கலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.கள்ளிபாளையம் பகுதியில் உள்ள டவர் ரூமில் 24 பேட்டரிகளைத் திருடிய வழக்கில் நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் பணத்தை மீட்டுள்ளனர்.

டவர் ரூமில் பேட்டரிகள் திருட்டு

வி.கள்ளிபாளையம் பகுதியில் கடந்த 02.08.2026 அன்று அதிகாலை சுமார் 2 மணியளவில், டவர் ரூமில் வைக்கப்பட்டிருந்த ரூ.24 ஆயிரம் மதிப்பிலான 24 பேட்டரிகளை மர்ம நபர்கள் அறையின் கதவை உடைத்துத் திருடிச் சென்றனர். இதுகுறித்து பிரபு என்பவர் அளித்த புகாரின் பேரில், காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

சிசிடிவி பதிவுகள் மூலம் விசாரணை

திருடப்பட்ட பேட்டரிகளையும், திருட்டில் ஈடுபட்ட நபர்களையும் கண்டறிய காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 14.10.2026 அன்று பொங்கலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், புத்தரச்சல் பேருந்து நிறுத்தத்தில் இருந்த நான்கு நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி அதிகாலை வி.கள்ளிபாளையம் பகுதியில் உள்ள டவர் ரூமின் கதவை உடைத்து 24 பேட்டரிகளைத் திருடி விற்பனை செய்தது தெரியவந்தது.

4 பேர் கைது – ரூ.12 ஆயிரம் மீட்பு இதையடுத்து, இந்தத் திருட்டு வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விவரம்:
சத்தியானந்த்.
ரஞ்சித்குமார்.
தினேஷ்குமார்.
பாலகிருஷ்ணன் .

இவர்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் பணத்தை காவல்துறையினர் மீட்டனர். பின்னர், கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *