வலங்கைமான் தாலுகாவில் ஜமாபந்தி 24-ந் தேதி முதல் 3நாடாகள் நடைபெறுகிறது, இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை அளித்து தீர்வு காண வட்டாட்சியர் அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் 71வருவாய் கிராமங்கள் உள்ளன. 1432 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு வலங்கைமான் தாலூகா அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயன் தலைமையில் மூன்று நாட்கள் நடைப் பெறுகிறது.

மே. 24-ந்தேதி ஆவூர் உள் வட்டத்தைச் சேர்ந்த அன்னுகுடி, உத்தமதானபுரம், சாலபோகம், மூலவாஞ்சேரி, அவிச்சாகுடி, நல்லூர், ரெங்கநாதபுரம், கிளியூர், இனாம்கிளியூர், கோவிந்தகுடி, வாணியக்கரம்பை, சிங்காராபாளையம், வீராணம், நல்லம்பூர், ஆவூர், ஊத்துக்காடு வேலூர் ஏரி, மணலூர், மதகரம், மாளிகை திடல்,வேலங்குடி, வீர மங்களம்,களத்தூர், விளத்தூர், மணக்கால், சடையாங்கால்,முனியூர்,கிளியூர், அவளியநல்லூர், 47,ரெகுநாதபுரம் உள்ளிட்ட 31வருவாய் கிராமங்களுக்கும், 25-ம்
தேதி வலங்கைமான் உள் வட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரபுரம், மேல விடையல், கீழவிடையல் கண்டியூர், சித்தன்வாழர், செம்மங்குடி, தொழுவூர், விருப்பாட்சிபுரம், ஆதிச்சமங்கலம், 18.ரெகுநாதபுரம் , வடக்கு பட்டம், தெற்கு பட்டம், புளியகுடி, பாடகச்சேரி, மாத்தூர், மருவத்தூர் கிராமங்கள் உள்ளிட்ட 17வருவாய் கிராமங்களுக்கும். 26-ந் தேதி ஆலங்குடி உள் வட்டத்தைச் சேர்ந்த திருவோணமங்கலம், அமராவதி, சார நத்தம் ,
ராஜேந்திர நல்லூர்,ஆலங்குடி, பூந்தோட்டம், பெருங்குடி,
அரித்துவாரமங்கலம், கேத்தனூர், நெம்மேலி குடி படுகை, நெம்மேலி குடி, தென்குவளவேலி, எருமைப்படுகை, நார்த்தாங்குடி, புலவர் நத்தம், பூனாயிருப்பு,, ரெகுநாதபுரம், மாணிக்கமங்கலம், பாப்பாகுடி, அரவத்தூர், அரவூர், பைத்தஞ்சேரி, கொட்டையூர் உள்ளிட்ட 23வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது. மேற்கண்ட ஜமாபந்தியில் பொது மக்கள் பட்டா மற்றும் பட்டா நகல் கோருதல் பட்டா மாறுதல் கோருதல் மற்றும் இதர கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம். இவ்வாறு வலங்கைமான் தாசில்தார் அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *