தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை அருவி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெரிய குளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் இயற்கையின் சூழலின் நடுவே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது இந்த கும்பக்கரை அருவி முழுக்க முழுக்க வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது

இந்நிலையில் கும்பக்கரை அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் வட்டக்கானல் வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்கிற மழை நீர் சிறு சிறு ஓடைகள் வழியாக வழிந்தோடி பல்வேறு மூலிகை செடிகளின் வேர்களுக்கிடையே கடந்து வந்து கும்பக்கரை ஆற்றில் வழியாக பயணித்து கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
இந்நிலையில் வேலூரைச் சேர்ந்த மணிகுமரன் என்ற சுற்றுலாப் பயணி தனது நண்பர்களுடன் கும்பக்கரை நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்த போது எதிர்பாராத விதமாக 9 சவரன் தங்க செயினையும் செல்போனையும் தவற விட்டுவிட்டார்.
காணாமல் போன தங்கச் செயினையும் செல்போனையும் கண்டுபிடித்து தருமாறு மணி குமரன் தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜனிடம் முறையிடவே வனத்துறை ஊழியர்கள் உதவியுடன் காணாமல் போன தங்க செயின் மற்றும் செல்போனை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தி காணாமல் போன தங்க செயினையும் செல்போனையும் கண்டுபிடித்து வனச்சரகர் டேவிட் ராஜன் இடம் வனத்துறை ஊழியர்கள் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட மணி குமரன் என்பவரிடம் வனச்சரகர் டேவிட் ராஜன் ஒப்படைத்தார். காணாமல் போன பொருளைப் பெற்ற மணிக்கு குமரன் வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கும்பக்கரை அருவிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் காணாமல் போன பொருளை உடனடியாக கண்டுபிடித்து உரிய நபரிடம் ஒப்படைத்த வனத்துறையினரின் துரித நடவடிக்கையை பாராட்டி வனத்துறையினருக்கு சுற்றுலாப் பயணிகள் நன்றி பாராட்டு தெரிவித்தனர்.

இதுகுறித்து வனச்சரகர் டேவிட் ராஜன் சுற்றுலா பயணிகளிடம் கூறியதாவது கும்பக்கரை அருவியில் குளிக்க வருகிற சுற்றுலா பயணிகளிடம் கும்பக்கரை அருவி நுழைவாயிலிலேயே அறிவிப்பகுதியில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து ஆரம்பத்திலேயே விலக்கி கூறி அருவிப்பகுதிக்கு வருகின்ற நபர்கள் அவர்களது உடைமைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அதேபோல உணவுப் பொருட்கள் சோப்பு ஷாம்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்தும்

மேலும் அருவியில் ஆண்கள் பெண்கள் என இரு பிரிவாக குளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அதேபோல தனித்தனியே குளிக்க வேண்டும் மேலும் அருவியில் குளிக்கும்பொழுது தங்கள் அணிந்திருக்கும் தங்கத்தினால் ஆன பொருட்களை பாதுகாப்பாக அணிந்து குளிக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் அருவியில் குளிக்கின்ற சுற்றுலா பயணிகள் ஆண்கள் உள்ளாடைகளுடன் குளிக்க கூடாது அரைக்கால் சட்டை அணிந்து குளிக்க வேண்டும் அதேபோல பெண்கள் அவர்களுக்கு தேவையான பாதுகாப்புடன் ஆடைகள் அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து முக்கியமாக மது அருந்திவிட்டு அருவிப்பகுதிக்கு வருவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கி கூறி
அருவிப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்பி வைக்கின்றோம் இருந்த போதும் ஒரு சில சுற்றுலாப் பயணிகள் தங்களது உடைமைகளை இதுபோன்று தவற விட்டு விடுகின்றனர் இதுபோன்று தவறவிடுகின்ற நபர்களுக்கு பொருட்களை மீட்டுக் கொடுக்கும் விதத்தில் அருவிப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வன ஊழியர்களின் உதவியுடன் பொருட்களை கண்டுபிடித்துக் கொடுப்பது மட்டுமல்லாது அருவியில் குளிக்கின்ற பொழுது தங்க நகைகளை தவற விட்ட பல்வேறு நபர்களுக்கு இதுவரையிலும் பல்வேறு தங்க நகைகளை மீட்டுக் கொடுத்திருக்கின்றோம் எனவே இனிவரும் காலங்களில் அருவிப்பகுதிக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினரின் அறிவுறுத்தலை மனதில் கொண்டு தங்களது உடைமைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *