வலங்கைமானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ
விபத்தால் பாதிக்கப்பட்ட இடத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பார்வையிட்டு நிதியுதவி வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் பகுதியில் திருமலை என்பவர் வீட்டின் முன் பகுதியில் அரசு ஐவுளிக்கடை நடத்தி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 10லட்ச மதிப்பிலான ஜவுளிகள் மற்றும் ரொக்கம் ரூ 50ஆயிரமும் சேதமாகியது. பாதிக்கப்பட்ட திருமலை-செல்வி தம்பதினரை முன்னாள் உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் நேரில் சந்தித்து கடையை பார்வையிட்டு ஆறுதல் கூறி நிதி உதவியும் வழங்கினார்.

அரசு அல்லது வங்கி மூலம் மீண்டும் தொழில் தொடங்க ஆவண செய்வதாக கூறினார். அவருடன் நகரச் செயலாளர் சா. குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் குமாரமங்கலம் சங்கர், இளவரசன், மாவட்ட பிரதிநிதிகள் ஆர். ஜி. பாலா, மூர்த்தி, மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஜெய. இளங்கோவன், நகர அவைத்தலைவர் ரெத்தினகுமார், திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப தலைவர் ராஜராஜ சோழன் மற்றும் மாத்தூர் குமார், கவுன்சிலர் அருள் முருகன் உட்பட பலர் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *