தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2023 ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் பசலி.1432ஜமாபந்தி தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) மற்றும் தீர்வாய அலுவலர் ஷீலா தலைமையில் நடைப்பெற்றது.
வருவாய் வட்டாட்சியர்கள் தெய்வசுந்தரி, ராம்குமார்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வீகே புதூர் வட்டத்தில் 24,- 05-2023-முதல் தொடங்கி 26-05-2023 வரை மற்றும் 30-052023 ஆகிய தேதிகளில் சிவகுருநாதபுரம், கருவந்தா, வீகே புதூர், கருவந்தா, ஊத்துமலை ஆகிய ஐந்து குறுவட்டங்கள் உள்ளன. இதில் 2. நாளன இன்று
வீகேபுதூர் வருவாய் குறுவட்டத்தில், வீராணம், வெள்ளக்காள்,
வீ.கே. புதூர் ராஜகோபாலபேரி, அகரம், ஆகிய ஐந்து கிராமங்களுக்கான வருவாய்துறைக்கானகணக்குகள் சாரிப்பார்த்தல் பொதுமக்களிடம் அனைத்து வகையான மனுக்கள் பெறப்பட்டு ஜமாபந்தி நடைப்பெற்றது.
நிகழ்வில், சமூக பாதுகாப்பு திட்டம் தனி.தாசில்தார் மகாலெட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் ஜெயமுருகன்,
மண்டல துணை வட்டாட்சியர் முருகன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், தாமரை கண்ணன், ஜமாபந்தி காணக்கு அலுவலர்கள் ஜெயந்தி, கார்த்திக் துணை வட்டாட்சியர் கருத்தப்பாண்டியன்,குறுவட்ட வருவாய் அலுவலர், ராஜாத்தி. கிராம நிர்வாக அலுவலர்கள் தர்மராஜ், சுமதி, வெள்ளப் பாண்டி கிராம உதவியாளர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.