கோவையில் உலகிலேயே முதன் முறையாக P4U புதிய மொபைல் செயலி அறிமுகம் கோவை அவினாசி சாலையில் உள்ள சிட்ரா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

விழாவில் கௌரவ விருந்தினர்களாக கோவை கே. ஜி. மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர். பக்தவச்சலம் பேசும் போது :- ஈஸ்ட் ஆர் வெஸ்ட் கோயம்புத்தூர் ஈஸ் பெஸ்ட். விஜய் யின் இந்த புராடக்ட் உலகம் முழுவதும் வைரலாக வேண்டும். பில்கேட்ஸ் போல இவர் புகழ் பெறுவார் என வாழ்த்துகிறேன் என்றார். மேலும் விழாவில் ஸ்ரீவாரி நிறுவனத்தின் தலைவர் ராமசாமி விழாவில் கலந்து கொண்டார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி டாக்டர் கலியமூர்த்தி, புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி பேசும் போது :- வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற பாரதியாரின் சவாலுக்கு ஒப்ப, இங்கு தன் அயராத முயற்சியால் எழுந்து பிரகாசிக்கிறார். அவரோடு செந்தில்குமார், ரகுபதி, பிரசன்னா என எழுச்சி இளைஞர்கள் குழுவாக உள்ளனர். விஜய் இன்று தகவல் தொழில் நுட்பத்தில் சாதனை இளைஞர். இந்தியாவின் வாழ்க்கைப் பாதையை தகவல் தொழிநுட்பத்துறையில் தனித்துவமிக்க பாதையாக மாற்றிக்காட்டவுள்ளார். கப்பல் என்றால் அது கடலில் பயணிக்கவேண்டும். கரையில் நிற்பதற்கல்ல. கப்பல் கட்டப்பட்டதன் நோக்கமே, புயல், கடும் மழை சூறாவளியைத் தாங்கிப் பயணிப்பதற்குத் தான்..மனிதப் பிறப்பும் சவால்களை வென்று, புதிய கண்டுபிடிப்புகள் மூலமும் சாதிப்பது தான். ஒரே பாதையில், பழக்கத்தின் நடையில் போய்க் கொண்டே இருந்தால் எதுவும் சாதிக்க முடியாது. டூ ஆர் டை எனும் வைராக்கியம் இளைஞர்களுக்கு அவசியமான பண்பாக இருக்க வேண்டும். விஜய் தொடர் உழைப்பை மேற்கொள்பவர் என்பதால் தான், அவரது அயராத முயற்சிக்கு இப்போது, இந்த அதிநவீன மொபைல் ஆப், சர்வதேச தரத்திலான இந்திய மொபைல் ஆப் வெளியாகியுள்கது – என்றார்.
விழாவில் அக்குபஞ்சர் டாக்டர் நித்தியானந்தம் கலந்து கொண்டார், மேலும் விஜய் டிவி புகழ் கீக்கி இந் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை புகழ் அசார் மற்றும் டி எஸ் கே அவர்களின் பல குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள யூடியூபர்கள் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விருதுகளை பெற்றனர்.

இந்த புதிய செயலி குறித்து. பிளான்நெக்ஸ்ட்4U சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் திரு. எஸ்பி. விஜய் மற்றும் பிரியங்கா விஜய் ஆகியோர் கூறும்போது :-P4U எனப்படும் இந்த புதிய செயலி மிக விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இது கூகிள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும். இதில் பொழுது போக வருமானமாக மாற்றுவது சமூக ஊடகத்தில் பதிவு போட்டால் வருமானம் இதில் பிரபலமாக வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் இந்தியாவில் உருவாகியுள்ள புதிய மொபைல் அப் இதுவாகும். இந்த ஒரே செயலியில் இ-காமர்ஸ் உட்பட நான்கு வகையான செயல்பாடுகள் உள்ளது. பொருட்களை வாங்குவது, விற்பது, சேவைகள் மற்றும் சமூக வலைதளம் ஆகியன இடம்பெற்றுள்ளன. உங்களிடம் உள்ள பொருட்களை விற்க வேண்டுமெனில் P4U – வில் பதிவு செய்தல் போதுமானது. நீங்கள் உங்கள் வீடுகளில் தயாரிக்கும் பொருட்களை எங்கள் மூலம், எங்களது விநியோக நிர்வாகிகள் உங்களது பொருட்களை சேகரித்து டெலிவரி செய்து விடுவார். மேலும் இச்செயலி மூலம் வேலை இல்லாதோர் தங்களது வருமானத்தை உருவாக்கி கொள்ளலாம்.
மேலும் இந்த புதிய மொபைல் செயலியில் உள்ள சமூக வலை தளங்களில் நீங்கள் பதிவிடும் பதிவுகளுக்கு கிடைக்கும் பாயிண்டுகளுக்கு ஏற்ப உங்களுக்கு ரிவார்டுகள் கிடைக்கும். அதை நீங்கள் பொருட்கள் வாங்கும் பொழுது உபயோகித்துக் கொள்ளலாம். மேலும் விவசாயிகளுக்கு என்று தனி டிஜிட்டல் பிளாட்பாரம் இதில் உள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை இத்தளத்தின் மூலம் வியாபாரம் செய்து கொள்ளலாம். இயற்கை சீற்றங்களினால் விளை பொருட்கள் பாதிக்கப்படும்போது இதன் மூலம் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் தவிர்க்க முடியும். இந்த மொபைல் ஆப் ஆனது தற்போது கோவை மாவட்டத்தில் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது கூடிய விரைவில் தமிழகம் மற்றும் அகில இந்திய அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எங்கள் ஆப் சேவைக்காக கோவையில் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் நாலு மினி மைக்ரோ மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதன் அறிமுக விழா களம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி அந்நிறுவனத்தின் சேர்மன் எஸ்பி விஜய் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேலும் விழாவில் இச்செயலியின் தொழில்நுட்ப இயக்குனர் பரத் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புதிதாக தொழில் தொடங்க உள்ள மற்றும் தொழிலில் ஏற்கனவே தொழில் வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *