தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் துரை.
இரவிச்சிந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் 2023 2024 -ஆம் ஆண்டில் சாகுபடி செய்யப்பட்ட நெல் – 1964 ஹெக்டேர், சிறுதானியங்கள் 968 ஹெக்டேர், பயறு வகைகள் ஹெக்டேர் பருத்தி – 833, கரும்பு 5 ஹெக்டேர், எண்ணெய் வித்து – 594 ஹெ பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது.

மழையளவு, இருப்பு மற்றும் இடுபொருட்கள் இருப்பு விபரம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது.

வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் ஒரு பயனாளிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2000/-மானியத்துடன் விசைத் தெளிப்பான் மற்றும் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்
தார்பாலின் ரூ.814/- மானியத்தில் ஒருவிவசாயிக்கு
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் மூலம் ரூ. 1200/- மானியத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டசத்து பாதுகாப்பு பொருட்கள், தேசிய வேளார் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 10,000/- மானியத்தில் பெரிய வெங்காயம் / விதை மற்றும் இடுபொருட்களும் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ரூ. 20,000/- மானியத்தில் வீரிய காய்கறி இனத்தில் இடுபொருட்கள் மற்றும் தாட்கோ மூலம் ரூ. 4,50,000/- மானியத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் இரண்டு பயனாளிகளுக்கு டிராக்டர் வழங்கப்பட்டது.

வேளாண்மை உழவர் நலத்துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-24-ம் ஆண்டிற்கு 40 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மற்றும் தரிசு நில தொகுப்புகளை தேர்வு செய்யும் பணிகள் குறித்து மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் உழவன் செயலி மற்றும் வேளாண் அடுக்ககம் கிரெயின்ஸ் திட்டங்கள் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியரால் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், கடையநல்லுார் வட்டார வேளாண்மைத் துறையினர், கீழப்பாவூர் மற்றும் தென்காசி தோட்டக்கலைத் துறையினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாய கண்காட்சியினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட விவசாயப் பெருமக்களும் திரளாகப் பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் விவசாயிகள் வழங்கப்பட்ட 185 மனுக்களுக்கு 21 நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவவர்களுக்கும்
அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் – தமிழ்மலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) – கனகம்மாள், தோட்டக்கலை துணை இயக்குநர்-. ஜெயபாரதி மாலதி, உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை)- சங்கர், முதுநிலை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் – ராஜேஷ், இணை பதிவாளர் (பொ) தென்காசி – அழகிரி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறை அலுவலர்கள், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *