திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் தாலுக்காவில் 41 ஆயிரத்து 746 ஆண் வாக்காளர்களும்,43 ஆயிரத்து 420 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 98 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
வலங்கைமான் தாலுக்காவில் 98 வாக்குச்சாவடி நிலையை அலுவலர்களை கண்காணிக்கும் வகையில் பத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பணிகளை தேர்தல் துணை வட்டாட்சியர், துணை வாக்குப்பதிவு அலுவலர் முறையே கண்காணித்து வருகின்றனர். வலங்கைமான் தாலூகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்றது.
இந்நிலையில் வலங்கைமான் தாலூகாவிற்கு உட்பட்ட 98 வாக்குச்சாவடி மையங்களிலும் கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இப்பணியில் வாக்குச்சாவடி நிலையை அலுவலர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சுகாதார ஊக்குனர்கள் ஆகியோர் சிறப்பு முகாம்களில் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவத்தினை நிரப்பிட உதவி புரிந்தனர்.
வலங்கைமான் தாலுக்காவில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் குமாரமங்கலம் கே. சங்கர், யூ. இளவரசன், நகர செயலாளர் சா.குணசேகரன், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளரும், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான மாஸ்டர் எஸ். ஜெயபால், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் ஆர்.ஜி.பாலா உள்ளிட்ட நிர்வாகிகள் ஆகியோர் பார்வையிட்டு, வாக்காளர்கள் படிவங்கள் குறித்து எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து உதவினர்.
அதேபோல் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் பா.சிவநேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆகியோர் பார்வையிட்டு வாக்காளர்கள் படிவங்கள் குறித்து எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து உதவினர். இரண்டு நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எஸ் ஜ ஆர் வாக்குப் படிவங்கள் பெறப்பட்டது.