போடிநாயக்கனூர் அருகே உப்புக் கோட்டை அரசு பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள உப்புக்கோட்டை அரசு கள்ளர் தொடக்க பள்ளியில் மாணக்கர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கற்போருக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உப்புக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் ஊராட்சி செயலர் முத்துக்குமார் ஆசிரியர் பயிற்றுநர் எஸ்.எம்.சி.தலைவர் வைத்தீஸ்வரி பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் பாடங்கள் கற்று பயன் பெற்றனர் சிறந்த மாணவ மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி இருபால் ஆசிரியர்கள் பள்ளி பணியாளர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்