திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் அம்மா என் பெருமை கவிதை நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க குளிர்மை அரங்கில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் தலைமை வகித்தார். சிறப்பு தலைவர் சௌமா இராஜரத்தினம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்வில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல் வெளியீடு, கவிஞர் கவி செல்வாவின் கவிதை, ஆங்கரை பைரவியின் கதை சமகால இலக்கியங்கள் குறித்து கவிஞர் கலியமூர்த்தி உரைவீச்சு நடைபெற்றது.
அம்மா என் பெருமை தலைப்பில் கவி செல்வா கவிதை வாசிக்கையில், வாழ்க்கையின் முதல் ஆசிரியர். வாழ்க்கையின் ஆரம்பம் முதல் சிக்கலான பிரச்சினைகள் வரை அனைத்திற்கும் தீர்வு அம்மா குடும்ப உறுப்பினர்கள் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பத புரிய வைத்தவர்.
ஒழுக்கத்தை எப்படி உயர்த்துவது, யாரையும் காயப்படுத்தாமல் இருப்பதை எப்படி உறுதி செய்வது என்பது அம்மாவின் வழிகாட்டுதலே. பணம் முக்கியம், ஆனால் அதுவே எல்லாம் அல்ல என்பதை கற்றுக் கொடுத்தவர்.
ஒரு பெண்ணாக வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பாதைகள் மற்றும் திருப்பங்கள் அம்மாவிற்குத் தெரியும்உணர்ச்சி வசப்பட்டு சிக்கலில் இருக்கும் நிலையில் தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்ள கற்றுக் கொடுத்த நெறிமுறைகள் வாழ்க்கை சிக்கலில் இருந்து மீட்டெடுக்க உறுதுணையாக உள்ளது என்றார்.திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் ஜவகர் ஆறுமுகம், நரம்பியல் நிபுணர் மருத்துவர் எம்.ஏ.அலீம்செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்,துணைத் தலைவர் சூர்யா சுப்பிரமணியன், திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க அமைச்சர் உதயகுமார் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர். முன்னதாக கவிச்செம்மல் கவிஞர் கோவிந்தசாமி வரவேற்க நிறைவாக அரிமா முகமது ஷபி நன்றி கூறினார்.