தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறையின் சார்பில் தொல்காப்பியர் சுழலரங்கம் நிகழ்ச்சி நாளை காலை பேரவைக்கூடத்தில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து இலக்கிய துறை தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாருமான முனைவர் தேவி கூறியதாவது:
தமிழ்மொழி வளர்ச்சிபெறும் நோக்கத்தை அடிப்படையாக்க் கொண்டு தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், “தொல்காப்பியர் சுழலரங்கம் – வெள்ளி வட்டம்” என்ற அமைப்பை ஏற்படுத்தி மாதந்தோறும் ஒரு கருத்தரங்கை ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் கடந்த ஆகஸ்டு 2025 முதல் நடத்தி வருகிறது.
அந்த வகையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து “தொல்காப்பியர் சுழலரங்கம்- மாநிலம் தழுவிய வெள்ளிவட்டம் தொடர்நிகழ்வு-5 நவ.28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்த இருக்கின்றன.
இந்நிகழ்ச்சியை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி துவக்கி வைக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித் துறை பேராசிரியரும் தலைவருமான முனைவர் ய.மணிகண்டன் “தமிழ் யாப்பியலும் தொல்காப்பியமும்” என்ற பொருண்மையில் சிறப்புரையாற்றுகிறார்.
இதில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், இலக்கியத்துறை மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் (ம) முனைவர்பட்ட ஆய்வாளர்களும் கலந்து கொள்கிறார்கள் என்றார்.