அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்ட மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குவின் சார்பாக அரசியல் அமைப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டம் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர்.சரவணன், மாவட்ட கண்காணிப்பாளர். பிரதீப்,விஜயகுமார், குடும்ப நல நீதிபதி,தீபா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் அரசியலமைப்புச் சட்டம் பற்றி உருவாக்கம் மற்றும் அதில் கூறப்பட்டுள்ள சரத்துக்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.
இதில் தலைவர் /முதன்மை மாவட்ட நீதிபதி.முத்து சாரதா தலைமை உரையாற்றி அரசியல் அமைப்புச் சட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.
செயலாளர்,சார்பு நீதிபதி.திரிவேணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அமர்வு நீதிபதி.முரளிதரன் நன்றியுரை கூறினார்.
இந்நிகழ்வில் திண்டுக்கல் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் உள்ள மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் திண்டுக்கல் மற்றும் தாலுகா துணை காவல் கண்காணிப்பாளர்கள், சிறை கண்காணிப்பாளர்கள், அரசு வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.