பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காணொளி ஒளிபரப்பும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர்.நவ.27. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த செய்தி மக்கள் தொடர்பு துறையின் எல்.இ.டி. வாகனம் மூலம் விழிப்புணர்வு காணொளிகள் ஒளிபரப்பு செய்யும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.


தற்போது மழைக்காலம் என்பதால் பொதுமக்களிடையை மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவதை வலியுறுத்துவது மிகவும் தேவையான ஒன்றாகும். நிலத்தடி நீரை அதிகரிக்க மழநீர் சேமிப்பு அவசியமாகிறது.

இந்த வாகனத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஒன்றியங்கள் மற்றும் நகராட்சி பேரூராட்சிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் இந்த விழிப்புணர்வு காணொளிகளை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிழ்வில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கண்ணதாசன் மற்றும்  உதவிப்பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *