தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகள் உள்ளன இங்கு தோராயமாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர் இந்த நிலையில் 14வது வார்டு நேதாஜி தெரு மற்றும் நேரு நகர் பகுதியில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்
இங்கு கடந்த நான்கு நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதி இது குறித்து 13வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி நிர்வாகம் கேட்டபோது நீரேற்றும் மோட்டார் பழுதடைந்ததால் இன்னும் ஐந்து நாட்கள் குடிநீர் விநியோகம் செய்ய இயலாது என தகவல் தெரிவித்தனர்
இதனால் அங்குள்ள, பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்., இந்தப் பற்றாக்குறைக்கு நகராட்சி நிர்வாகம் சார்பாக தல 4 குடங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.ஆகவே விரைந்து குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..