விபத்தில் காயமடைந்த தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமாரை அவரது இல்லத்திற்கு சென்று கனிமொழி எம்.பி நலம் விசாரித்தாா்.

 தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் சமீபத்தில் அவரது மகளை கரூர் அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் பொழுது ஏற்பட்ட கார் விபத்தில் சரவணக்குமார் காயம் அடைந்து, கோயம்புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான சரவணக்குமாரிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்.

 இந்நிலையில், கனிமொழி எம்.பி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஒன்றிய செயலாளர் சரவணக்குமாரை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்ததோடு, விரைவில் குணமடைந்து கழக பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் தங்களுக்கு எந்த உதவி தேவையென்றாலும் தெரிவியுங்கள் என்றும் சரவணக்குமார் மனைவியிடமும் தாங்கள் தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் கூறினார். 

 அப்போது மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா, தெற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளா் வீரபாகு, தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ்பாலன்,ஓன்றிய துணைச்செயலாளா் கணேசன், ஓன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாப்பிள்ளையூரணி முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினா் பாரதிராஜா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், திமுக இளைஞரணி கௌதம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *