தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் சென்னை தரமணி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறை, இணைந்து நடத்திய ‘தொல்காப்பியர் சுழலரங்கம்’ மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம் ஐந்தாவது தொடர் நிகழ்வு பேரவைக்கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவர், மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஜெ.தேவி வரவேற்றார்.
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி மற்றும் மொழியியல் புலம் இணைப்பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் நோக்க உரையாற்றினார்.பதிவாளர் (பொ.) கோ.பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னைப் பல்கலைக்கழக தமிழ்மொழித்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ய.மணிகண்டன் தமிழ் யாப்பியலும் தொல்காப்பியமும் என்ற தலைப்பில் காலத்தால் கணிக்கமுடியாத அளவிற்கு இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட பனுவல்தான் தொல்காப்பியம் என்றும் அப்படிப்பட்ட நூலிலே ஆயிரமாயிரம் நூற்பாக்கள் இருந்தபோதிலும் ‘ரகார ழகாரம் குற்றொற்றாகா’ என்னும் நூற்பா வழி விளக்கங்களை அளித்து தமிழ் பல்வேறு இலக்கியச் செல்வங்களைக் கொண்டது என்றார்.
தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறை பேராசிரியர் இளையா பிள்ளை நன்றி கூறினார்.இதில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டு பயன் பெற்றனர்