வாலாஜாபாத் பகுதியில் இறந்த 53 நபர்களின் கண்களை தானம் செய்ய வைத்த பேரூராட்சி கவுன்சிலர்!-கவுன்சிலருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உயிரிழப்பு ஏற்பட்டால், இந்த தகவலை அறிந்தவுடன் வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற உறுப்பினர் அலை டாக்டர் ஆர்.வெங்கடேசன், இறந்தவரின் உறவினர்களுடன் ஆலோசித்து இரண்டு கண்களையும் தானமாக பெற்று சங்கர் கண் மருத்துவமனை வங்கிக்கு வழங்கி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும், கல்வி நிதி உதவியும் வழங்கி வருகிறார். மேலும் இதுவரை கவுன்சிலர் வெங்கடேசன், மூலம் இந்த ஆண்டில் மட்டும் 53 நபர்களிடமிருந்து கண் தானமாக பெற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பார்வை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற கண் தானம் செய்வதற்கான ஆலோசனைகள் வழங்கி வரும் செயல் வாலாஜாபாத் மக்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *