தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
Breaking
தாராபுரம்: விதி மீறி கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் இடிக்க நோட்டீஸ் ஒட்
டப்பட்ட நிலையில் 4 மாதம் அவகாசம் வழங்க கோரி பெற்றோர்கள் பள்ளி மாணவர்களுடன் மழையில் நனைந்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் என்பவர் தனியார் பள்ளி விதிமீறல் தொடர்பாக வழக்கு தொடர்ந்த நிலையில் அவரது உறவினரான தண்டபாணி கூலிப்படையை வைத்து வழக்கறிஞர் முருகானந்தத்தை வெட்டி கொலை செய்தார்.
இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் பள்ளியின் விதிமீறல் கண்டறியப்பட்டு கட்டிடத்தை இடிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தாராபுரம் நகராட்சி சார்பில் விதிமுறை கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தை இடிக்க உள்ளதாக நோட்டீஸ் ஓட்டப்பட்டது.
மேலும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் பயின்று வந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுப் பள்ளியில் தேர்வு எழுத மற்றும்
பயில ஏற்பாடு செய்தனர்
மற்ற மாணவர்கள் பயில எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத சூழலில் அடுத்த நான்கு மாதங்களில் ஆண்டு தேர்வு நெருங்கி வரும் நிலையில் பள்ளியை இடித்தால் தங்களது குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சீருடை உடன் உள்ள தங்களது குழந்தைகளுடன் கொட்டும் மழையில் நனைந்தபடி 500-க்கும் மேற்பட்டோர்
தாராபுரம்-பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.