மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம்

தென்காசி

தென்காசி மாவட்டம் தென்காசி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது குற்றால அருவிகளின் பிரதான அறிவி பழைய குற்றால அருவி சிற்று அருவி புலி அருவி ஐந்தருவி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக நீர்வரத்தும் அதிகரித்து அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஆறு தினங்களாக குளிப்பதற்கு தடைவிதித்து நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில் நேற்று முதல் நீர்வரத்து சரியான நிலையில் குளிப்பதற்கு அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது

இதனால் இப்பகுதி வியாபாரிகள் மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளனர் தற்போது சபரிமலையில் சீசன் தொடங்கிய நிலையில் அதிக அளவில் ஐயப்ப பக்தர்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு சென்று பின் திரும்பும்போது குற்றாலத்திற்கு வந்து குளித்து செல்வது வாடிக்கையான ஒன்று இந்நிலையில் இப்பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அதிகப்படியான வியாபாரங்கள் ஐயப்ப பக்தர்களால் கலைக்கட்டுக்குடிய சூழ்நிலையில் தற்போது அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சீராக விழுவதால் நேற்று முதலே ஐயப்ப பக்தர்கள் நீராடி மகிழ்கின்றனர் இதனால் இப்பகுதி ஐயப்ப பக்தர்களால் மிகுந்து காணப்படுகிறது

அனைத்து அருவிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை சிறப்பாக செய்துள்ளது குறிப்பிடத்தக்கது வாகனத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்பு குறிப்பான அனைத்து செயல்களிலும் தென்காசி மாவட்ட காவல்துறை சிறந்து விளங்குகிறது என்பதால் இங்கு வந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர் .

குற்றால பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளுக்கு இல்லாத நிலையில் குளிர் 20 டிகிரி செல்சியஸ் குறைவாக உள்ளதால் இப்பகுதி குளு குளு குற்றாலம் என்ற நிலையில் உள்ளதால் இப்பகுதி மக்கள் மிகுந்த சந்தோசம் அடைந்துள்ளனர் சீதோசன நிலை அடிக்கடி மாறும் நிலையில் மழையும் குளிரும் சேர்ந்து மாறி மாறி தோன்றுவதால் தென்காசி மாவட்டமே சிறிய கொடைக்கானல் என்ற அளவிற்கு மாறி உள்ளதாக இப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வெகுவாக கூறி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *