செய்தியாளர் சீனிவாசன்.
பெரியபாளையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.
பெரியபாளையம்,பெரியபாளையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் 27-ஆம் பிறந்த 3 பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் அணிவித்தார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெரியபாளையத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 27-ஆம் தேதி அன்று பிறந்த 3.பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி தலைமைச் செயற்குழு உறுப்பினரும், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான பி.ஜெ. மூர்த்தி தலைமையிலும்
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் கலந்துகொண்டு 3 பச்சிளம் குழந்தைகளுக்கு 1.கிராம் எடையுள்ள தங்க மோதிரத்தை அணிவித்து ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகத்தை குழந்தைகளின் பெற்றோரிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் மு.பகலவன்,பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.வி.ராமமூர்த்தி, ப.செ.குணசேகரன், கலை,இலக்கியப் பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வி.பி.ரவிக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் கே.வி.ஜி. உமாமகேஸ்வரி, வழக்கறிஞர் வெங்கடாஜலபதி எல்லாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் தீபலட்சுமி,தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சக்திவேலு, அவை தலைவர்கள் பி.என். ரவிச்சந்திரன் டி.கே.முனிவேல், முன்னாள் மாவட்ட பிரதிநிதி தமிழரசன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் டி.சங்கர், மாதர் பாக்கம் ஜெ.மோகன் பாபு,ஏனம்பாக்கம் சம்பத், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சித்ராமுனுசாமி,வடமதுரை அப்புன், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பெரியபாளையம் ஐ.ராஜா மாணவரணி விமல், சிக்கன் சம்பத்,உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்…