பூங்காவை காணவில்லை என அண்ணா சிலை முன்பு கண்டன கோஷம் எழுப்பி நூதன முறையில் மனு கொடுத்த வழக்கறிஞர்-பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் நூதன முறை போராட்டம்
சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் திருவொற்றியூர் நகராட்சியாக இருந்த போது கேசவன் பூங்கா இருந்தது. அங்கு காலை நேரங்களில் தூய்மை பணியாளர்களை பணிக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. மாலை நேரங்களில் பூங்காவாக செயல்பட்டு வந்தது.
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் பூங்காவை தனியார் சிலர் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து தற்பொழுது பூங்கா இருந்ததற்கான அடையாளமே தெரியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறி தொண்டர் இயக்க மாநில தலைவர் தொண்டன் சுப்பிரமணி பூங்காவை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி பலமுறை திருவொற்றியூர் நகராட்சியாக இருந்த போதும் மாநகராட்சியாக மாறிய போதும் மனுக்கள் அளித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று தொண்டர் இயக்க மாநில தலைவர் தொண்டன் சுப்பிரமணி தலைமையில் தொண்டர் இயக்கம் மற்றும் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் திருவொற்றியூர் தேரடியில் இருந்து பேரணியாக மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து அலுவலக வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை முன்பு உடனடியாக பூங்காவை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி. கோஷங்களை எழுப்பினர். பின்னர். அண்ணா சிலைக்கு மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.