கா.கொத்தம்பட்டி அரசு பள்ளியில் ரூ6லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்-கே என் அருண்நேரு எம் பி திறந்து வைத்தார்
துறையூர்
திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றியம் 28-11-2025 அன்று காலை 10 மணியளவில் கண்ணணூர் ஊராட்சி கா.கொத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு தனது பாராளுமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியை தலைமையில் பள்ளி ஆசிரியர்,ஆசிரியைகள்,மாணவ மாணவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.இதில் எம்எல்ஏ ஸ்டாலின் குமார்,முன்னாள் சேர்மன் தர்மன் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் சோபனபுரம் கனகராஜ், ஒன்றிய செயலாளர்கள் வீரபத்திரன், அண்ணாதுரை சிவ சரவணன், முத்துசெல்வன், அசோகன்,பொது குழு உறுப்பினர் கிட்டப்பா, பூபதி துறையூர் நகர செயலாளர் மெடிக்கல் முரளி,துறையூர் நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி ரவிச்சந்திரன்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோகிலா, கண்ணனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி ரவிச்சந்திரன், ஊராட்சி செயலர் வேல்முருகன், மாவட்ட விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செங்கை செல்லமுத்து,மாவட்ட ஐடி விங்க் சேகர்,மாவட்ட பிரதிநிதி குமார், ரெங்கநாதபுரம் கார்த்திக், செல்வகுமார் ,இளைஞர் அணி ஸ்டுடியோ சசிகுமார், ஒப்பந்ததாரர் வினோத்குமார், முருகூர் சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்