கவிஞர் கா சி குமரேசன் எழுதிய ஒரு *கூட்டுப் குழுவின் கிரகப்பிரவேசம் நூல் வெளியீட்டு விழா
பல்சுவை கவிதை தொகுப்புகளாக தொகுத்த புத்தகத்தை சொல்லின் செல்வர் சிந்தனை கவிஞர் கவிதாசன் வெளியிட்டு வாழ்த்துரை
சோலை பதிப்பகத்தின் சார்பில் கவிஞர் கா. சி. குமரேசன் எழுதிய ஒரு கூட்டுப் குழுவின் கிரகப்பிரவேசம் நூல் வெளியீட்டு விழா கோவை திருச்சி சாலையில் உள்ள டிவிஹெச் விஸ்தா ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு துறை தலைவரும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியின் செயலாளருமாண சொல்லின் செல்வர் சிந்தனை கவிஞர் கவிதாசன் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
விழாவில்,கோவை பாரதியார் பல்கலைக்கழக, மகாகவி பாரதியார் உயராய்வு, இயக்குநர், பேராசிரியர். சி சித்ரா முதல் புத்தகத்தை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்…
அப்போது பேசிய சிந்தனை கவிஞர் கவிதாசன்,டிஜிட்டல் உலகில் வாசிப்பு திறனை அதிகபடுத்துவது இளம் தலகமுறைக்கு கட்டாயம் என கூறிய அவர்,அது போன்ற வாசிப்பு திறனை தூண்டும் வகையில் இந்த புத்தகத்தின் கவிதைகள் இருப்பதாக கூறினார்..
புத்தகத்தை எழுதிய கா.சி்..குமரேசன் பேசுகையில்,தமது வாசிப்பு திறனின் அனுபவங்களை கொண்டு இந்த கவிதை தொகுப்பு புத்தகத்தை எழுதி உள்ளதாக தெரிவித்தார்..
விழாவில் இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள்,எழுத்தாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்…