திருவொற்றியூர்,ஆர்.கே.நகர், மாதவரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ. மாணவிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமா இருக்கும்.இந்த பாலிடெக்னிக் கல்லூரி என தெரிவித்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு
திருவொற்றியூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி கட்டித்தர வேண்டுமென்று சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்று விம்கோ நகரில் ரீட் கூட்டுறவுக்கு துறைக்கு சொந்தமான இடத்தில் பாலிடெக்னிக் கல்லூரி கட்ட திட்டமிடப்பட்டு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டத்தில் இதற்காக ரூ27.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி கட்டுமான பணி துவக்கப்பட்டது பணி நடைபெற்று வருகிறது
இதில் 98480 சதுர அடி பரப்பளவில், இரண்டு தளம்,15 வகுப்பறைகள்,4 தொழில் பயிற்சி கூடம், ஆய்வகம்,வரைவு அறை உள்ளிட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு தேவையான அனைத்து வசதியுடன் நவீன முறையில் கட்டிடம் கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.இந்த பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது கட்டிடத்தில் உறுதித் தன்மை, முடிக்க வேண்டிய கால அவகாசம் போன்றவைகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து ஐடிஐ வளாகம் கட்டுமான பணியையும் அவர் ஆய்வு செய்தார்.
அமைச்சருடன் ,உறுப்பினர் செயலாளர் பிரகாஷ், செயற்பொறியாளர் துர்கா,கே.பி.சங்கர் எம்எல்ஏ,மண்டலகுழு தலைவர் தி.மு.தனியரசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது தமிழக முதல்வரின் ஆணையின்படி சென்னை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஐடிஐ பாலிடெக்னிக் கல்லூரி கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் பணி பிப்ரவரி மாதம் இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது. திருவொற்றியூர்,ஆர்.கே.நகர், மாதவரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ. மாணவிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமா இருக்கும்.இந்த பாலிடெக்னிக் கல்லூரி அடுத்த கல்வி ஆண்டில் கட்டமைப்பு முடிவுற்று பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதுவரையில் மூன்று படைப்பகம், நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. படிப்படியாக இந்த ஆண்டு இறுதிக்குள் 10 நூலகங்களை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது தொடர்ந்து பிப்ரவரி மாதத்திற்குள் எடுத்துக்கொண்ட பணிகளில் 70% மேலாக மக்கள் பயன்பாட்டை கொண்டு வரப்படும். மாண்புமிகு தமிழக முதல்வரின் சிந்தையில் உதித்த இந்த திட்டம் ஆர்.கே. நகரில் 2 இடங்களில் படைப்பகம்,நூலகம்,மற்றும் ஐபிஎஸ்,ஐஆர்எஸ் தேர்வுக்கு பயிற்சி தரக்கூடிய கல்லூரியும் துவக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு படைப்ப கத்திலும் 450 பேர் படிப்பதற்கும், வசதி இல்லாதவர்கள் படைப்ப கங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் ஐபிஎஸ் ஐ ஆர் எஸ் போன்ற தேர்ச்சிக்கு படிக்கின்ற மாணவர்கள் ஒரு நாளைக்கு 120 பேர் இரண்டு ஷிப்டுலாக பிரித்து பயின்று வருகின்றனர். வீட்டில் கல்வி கற்க முடியாத சூழல் உள்ள மாணவ,மாணவியர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது இந்த திட்டம் பொது மக்களிடம் வரவேற்பு இருக்கிறது இந்த படைப்பிரகங்களையும் நூலகங்களையும் புதுப்பிக்கின்ற பணியில் துறை அதிகாரிகள் கால ஆய்வு செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார் பின்னர் திருவொற்றியூர் தேரடியில் கச்சாலிஸ்வர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள திருவள்ளுவர் கோவில் 47 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகிறது. அதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.