பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரி பட்டமளிப்பு விழா….
முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு 381 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்-தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆர்.டி.பி கல்வி குழுமத்தில் இராஜகிரி தாவூத் பாட்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22-வது மற்றும் ஆர்.டி.பி கல்வியியல் கல்லூரியின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பாபநாசம் ஆர்.டி.பி கல்வி குழுமத்தின் தாளாளர் முனைவர். எம்.ஏ. தாவூத்பாட்சா தலைமை வகித்தார் பாபநாசம் ஆர்.டி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எம். முகம்மது முகைதீன் வரவேற்று பேசினார் விழாவில் முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் முனைவர் சி.சைலேந்திரபாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றி 381 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது….
மாணவர்கள் வாழ்க்கையில் மிக உன்னதமான நிலையை அடையவேண்டும் என்றால் இந்த நான்கு விஷயங்கள் பின்பற்ற வேண்டும் விமர்சன சிந்தனை, படைப்பு சிந்தனை, ஒத்துழைப்பு, ஆர்வம் ஆகியவை இருக்க வேண்டும். அதற்கு தினமும் ஒரு ஆங்கில செய்தித்தாள் ஒரு தமிழ் செய்தித்தாள் கட்டாயம் படிக்க வேண்டும். வேலை வாய்ப்பு திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். கல்வி என்பது பாடப்புத்தகம் அல்ல அது ஒரு கண்டுபிடிப்பு. வெற்றிக்கு எல்லையே இல்லை. மாணவர்கள் அனைவரும் ஒரு இலக்கோடு இருக்க வேண்டும். தான் என்ன ஆக வேண்டும் என்ற இலக்கு இருந்தால் நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் உலகையே ஆளலாம். மாணவர்களுக்கு கல்வி மிக அவசியம். அனைவரும் அவர்களது பெற்றோர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். நம் தமிழக காவல் துறையில் 25,000 காவலாளிகள் உள்ளனர்.
அதே போல நீங்களும் ஐபிஎஸ் ஆகவும் ஐஏஎஸ் ஆகவும் ஆக வேண்டும் ஆர்.டி.பி கல்லூரியில் அதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான 5 விஷயங்கள் நமக்கு தேவை. அன்பு, நியாயமான வருமானம், மன மகிழ்ச்சி, நல்ல உறவுகள் எதிர்கால நம்பிக்கை போன்ற வாழ்க்கைக்கு தேவையான மற்றும் பின்பற்றகூடியவை நமக்கு மிக முக்கியம் இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் ஆர்.டி.பி கல்விக் குழுமத்தின் நிர்வாகிகள், அனைத்து முதல்வர்கள், மூத்தத் தலைவர்கள்,துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.