மேட்டுப்பாளையத்தில்
திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் மாமன்னன் படத்தின் முதல் காட்சிக்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பட்டாசுகளை வெடித்து கொண்டாடிய ரசிகர் மன்றத்தினர் முதல் காட்சிக்கு பார்க்க வந்திருந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி திரையரங்குக்குள் அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அருகில் இருக்கும் காவல்துறையினர் மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி ஆர் சண்முகசுந்தரம்,சிறுமுகை பேரூராட்சி செயலாளர் உதயகுமார், மேட்டுப்பாளையம் தெற்கு நகர செயலாளர் வக்கீல் முனுசாமி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *