சோழவந்தான்

விக்கிரமங்கலம் அருகே அமைந்து அருள் பாலித்து வரும் முதலைக்குளம் கம்பகாமாட்சி கருப்புசாமி கோவில் எதிரே உள்ள. சுமார் 200.ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறை பராமரிப்புல் கண்மாய் அமைந்துள்ளது.திருமங்கலம் பாசன கால்வாய் மூலம் நீர் வரத்து பெறும் இக்கண்மாயில் கருப்புசாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்தி கடனாக கட்லா ரோகு.உள்ளிட்ட பல்வேறு ரக மீன் குஞ்சுகள் விட்டு செல்கின்றனர்

இப்படி ஆண்டு முழவதும் விடப்படு மீன் குஞ்சுகள் வளர்ச்சியடைந்தநிலையில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வரும் வியாழகிழமையன்று இக்கண்மாயில் மீன் பிடி திருவிழா நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்த முதலைகுளம் கிராம மக்கள் .. இந்தாண்டு மீன் பிடி திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 5.30.மணியளவில் பூஜாரி பொன்ராமன் தலைமையில் கம்பகாமாட்சி கருப்புசாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர்.

பின்னர் முதலைக்குளம் இரண்டு தேவர் வகையறா.மற்றும் பாசன கமிட்டி தலைவர் ராமன்.ஆகியோர் முன்னிலை யில் அதிர்வேட்டுகள் முழங்கிய பின்னர் கரையில் கூடியிருந்த பொதுமக்கள் கண்மாயிக்குள் சென்று வலை ஊத்தா. உள்ளிட்டவைகள் மூலம் மீன்களை பிடித்து சென்றனர்.

இப்பராம்பரியமிக்க மீன் பிடித்திருவிழாவில் மதுரை தேனி புதுக்கோட்டை திண்டுக்கல் சிவகெங்கை விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 5.ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..மேலும் மீன் பிடி திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த ஒவ்வொரு மீனும் கருப்புசாமி பிரசாதமாக கருதுவதாக. கூறி மெய் சிலிர்க்க. வைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *