கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

திருப்பனந்தாள் அருகே ஒழுகச்சேரியில் 150 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ பிருகத்சுந்தர குஜாம்பிகா ஸமேச ஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திரளான பக்தர்கள் பங்கேற்பு.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே ஒழுகச்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ பிருகத்சுந்தர குஜாம்பிகா ஸமேச ஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி ஆலயம்.

இவ்வாலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று புனித நீருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது .

அதனைத் தொடர்ந்து கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *