அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் முடுவார்பட்டி ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணைந்து சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் தன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி, துணை சேர்மன் சங்கீதாமணிமாறன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் கிழக்கு ஒன்றிய பொருளாளர் சுந்தர், அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரிகோவிந்தராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவின் பொது மேலாளர் சாந்தி வரவேற்றார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நடராஜகுமார், துணைப் பதிவாளர் பால்வளம் செல்வம், உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் கால்நடைகளை பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்பட்டன. சிறந்த பசுவிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதாப், கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் யோகேஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தண்டலை தவசதீஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *