கோவையில் பள்ளிகளுக்கு செல்லும் இளம்பெண்கள் உட்பட பெண்களுக்கு மாதவிடாய் சுகாதார மற்றும் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வைஅமிர்தா விஸ்வ வித்யாபீடம் யுனெஸ்கோவுடன் இணைந்து பெண்களுக்கான மாதவிடாய் சுகாதார பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

பாலின சமத்துவம் மற்றும் கோவையில் பள்ளிகளுக்கு செல்லும் இளம்பெண்கள் உட்பட பெண்களுக்கு மாதவிடாய் சுகாதார மற்றும் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் OMNEX ஆதரவுடன் எட்டி மடையில் உள்ள அமிர்தா விஷ்வ வித்யா பீடத்தின் வளாகத்தில் C20 இந்தியாவின் ஒருங்கிணைந்த ஹோலிஸ்டிக் ஹெல்த் வேலை கொடுக்கல் மற்றும் கற்பித்தல் கற்றல் தொகுதிகளை அறிமுகப்படுத்துகிறது.

இது குறித்தான என்ற பிரச்சாரம் ஜூன் எட்டாம் தேதி அன்று ஃபரிதராபாத்தில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் துவங்கியது.
இந்த பிரச்சாரத்தில், கோவையில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் ஆசிரியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தலைமை விருந்தினராக இஎஸ்ஐ மருத்துவமனை டீன் ரவிந்திரன், தொண்டாமுத்தூர் மருத்துவ அலுவலர் சுபாஷினி அமிர்தா விஷ்வ வித்யாபீடம் டாக்டர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *